சத்தமே இல்லாமல் நடந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் திருமணம்.! வைரலாகும் புகைப்படம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் ஏராளமான பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வரும் பலரும் விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலினை பிரவீன் பென்னட் இயக்குகிறார். மலையாள தொடரான கருத்தம்மா என்ற சீரியலை ரீமேக் செய்துள்ளார் இந்த சீரியல் ஆரம்பமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது

மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் சுவாரசியம் குறைந்ததால் இந்த சீரியல் எப்பொழுது முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சில நாட்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது விரைவில் இந்த சீரியல் முடிய இருக்கும் நிலையில் இந்த ஒரு நாட்களுக்காக ரசிகர்கள் பல மாதங்களாக காத்து வந்தார்கள்.

SURESH 1
SURESH 1

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் நடித்துவரும் பிரபல நடிகர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து வந்த ரோகினி இந்த சீரியலில் இருந்து முதலில் விலகினார்.

SURESH
SURESH

இவரை தொடர்ந்து பாரதியின் தம்பியாக அகில் கதாபாத்திரத்தில் நடித்த வந்த நடிகரும் விலகிய நிலையில் அகில் கதாபாத்திரத்திற்கு பதிலாக சுரேஷ் என்பவர் நடிக்க தொடங்கினார். இப்படிப்பட்ட நிலையில் அவருக்கு தான் தற்பொழுது திருமணம் நடைபெற்ற உள்ளது அவருடைய திருமணத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடித்து வரும் அனைத்து பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் கூறிவுள்ளார்கள்.

Leave a Comment