பாரதி கண்ணம்மா மற்றும் சுந்தரி சீரியல் நடிகைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.! வைரலாகும் தகவல்..

வெள்ளித்திரையில் எந்த அளவிற்கு போட்டி இருந்து வருகிறதோ அதே போல் சின்னத்சிரையிலும் தொலைக்காட்சிகளுக்கு இடையே போட்டி இருந்து வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது.

இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த தொலைக்காட்சியில் அடுத்து வரும் நடிகைகளுக்கு தொடர்ந்து சினிமாவில் லக் அடுத்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்.  அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவர்களுக்கு தான் லக்கடித்துள்ளது ஏனென்றால் பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் டிக் டாக் பிரபலம் வினோத் தேவி மற்றும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரில்லா செலஸ் இருவரும் இணைந்து கதாநாயகியாக N4  நடிக்க இருக்கின்றார்கள்.

இப்படத்தில் இவர்கள் இருவரும் மீனவ பெண்ணாக நடிக்க இருப்பதாகவும்  மைக்கேல், தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர்,வடிவுக்கரசி, அழகு உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை ‘என் மகன் மகிழ்வன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லோகேஷ் குமார் இயக்குகிறார்.

திரைப்படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் காசிமேடு காவல் நிலையத்தின் குறியீட்டு எண் N4, இதன் காரணமாக தான் இத்திரைப்படத்தின் டைட்டிலாக இதனை வைத்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தில் ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கும் வகையில் இருப்பதால் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோர்களின் வழிகாட்டலுடன் பார்க்கக்கூடிய படங்களுக்கு மட்டுமே U/A சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு சின்னத்திரை நடிகைகளான வின்ஷா தேவி மற்றும் கேப்ரில்லா செலஸ் இருவரும் இணைந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளார்கள் என்பது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment