16 வயதினிலே படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை ஏமாத்திய பாரதிராஜா.! கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..

தமிழ் சினிமா உலகில் இப்பொழுது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமலுக்கு மிகப்பெரிய ஒரு பெயரை பெற்று கொடுத்த திரைப்படம் தான் பதினாறு வயதினிலே இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். கமல், ரஜினி, கவுண்டமணி, ஸ்ரீதேவி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்தனர்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.  இந்த படத்திற்கு பிறகு ரஜினி, கமலுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன. கமலஹாசன் இந்தப் படத்திற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் திரைப்படங்களில் செம ஸ்டைலான ஹீரோவாக நடித்திருந்த கமல் 16 வயதினிலே படத்திற்காக மட்டும் கிழிந்த சட்டை ஏன் கோமணம் கட்டிக்கொண்டு கூட படத்தில் அவர் நடித்தவர். அந்த அளவிற்கு அந்த கதையின் மீது நம்பிக்கை வைத்து தனது திறமையை காட்டி நடித்தார்.

இந்த படத்தின் கதையை கேட்காமல் கமல் இந்த படத்தில் நடித்திருந்தாராம். கமல் பாரதிராஜாவுடன் உதவி இயக்குனராக இருந்த அப்பொழுதே இந்த கதையை பாரதிராஜா ரெடி செய்து இருவரும் கலந்து பேசிக் கொண்டனர். அதனால் படத்தின் கதையைக் கேட்கவில்லை மேலும் இந்த படத்திற்காக தனக்கு முப்பதாயிரம் சம்பளம் வேண்டும் என கேட்டுள்ளார் ஒரு வழியாக கடைசியில் 27 ஆயிரம் சம்பளமாக கமலுக்கு நிர்ணயிக்கப்பட்டதாம்.

ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் பாரதிராஜா இருந்து உள்ளார் அப்பொழுது பைக்கில் செம்ம ஸ்டைல்லாக ஒரு ஹீரோ வந்து இறங்கினாராம் யார் அது என்று பார்த்தால் ரஜினியாம். இவர்தான் பரட்டை கதாபாத்திரத்திற்கு சிறப்பாக இருப்பார் என கருதி அவரையும் 16 வயதிலே படத்தில் கமிட் ஆக்கினார். ரஜினி சம்பளமாக சுமார் 5000 கேட்டுள்ளார். ஆனால் 3000 தருவதாக சொல்லி கடைசியில் 2700 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாம் இதனை பாரதிராஜா சமீபத்திய பேட்டில் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. ஒரு முறை இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் படச்சுருள் வருவதற்கு லேட் ஆகியுள்ளது. நடிகர் நடிகைகள் அனைவரும் மேக்கப் செய்து ரெடியாக இருந்துள்ளனர் என்ன செய்வது என்று தெரியாமல் பாரதிராஜா வெறும் கேமராவை மட்டும் ஆன் செய்து  வை என ஒளிப்பதிவாளர் இடம் சொல்லி உள்ளார்.

அவரும் வேறு வழியின்றி கேமராவை ஆன் செய்ய கமல் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் கேமராவில் இருந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது கமலுக்கு புரிந்து விட்டது கேமராவில் படசுருள் இல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு உடனே பாரதிராஜா பக்கம் வந்து இப்படி நீங்கள் படம் எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லுங்கள் எனது சம்பளத்தை கூட தந்து விடுகிறேன் என கமல் கூறி உள்ளார். சமீபத்திய மேடை ஒன்றில் பாரதிராஜா இதனை போட்டு உடைத்தார்.

Leave a Comment