பாரதிகண்ணம்மா சீரியலிருந்து விலகிய கண்மணிக்கு இப்படி ஒரு சோகமா.? நம்ப வச்சி ஏமாத்திட்டாங்க.?

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களிடையே இன்றும் டாப் லிஸ்டில் உள்ளன. அந்தவகையில் பாரதிகண்ணம்மா சீரியலின் கதை களத்தை மிக விறுவிறுப்பாக சுவாரசியமாக கொண்டு செல்கின்றனர்.

மேலும் தற்போது கண்ணம்மாவின் மகள் லட்சுமிக்கு தனது அப்பா யார் என எட்டு வருடங்களுக்கு மேலாக தெரியாமல் இருந்த நிலையில்  தற்போது அதற்கான விடை கிடைத்து சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மூலம் ரசிகர்களை வருத்தமடையச் செய்யும் செயல் என்றால் இந்த தொடரில் நடித்து வந்த பல நடிகர் நடிகைகள் மாறி வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

அப்படி இருக்கின்ற நிலையில் சீரியல் ஆரம்பத்தில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கண்மணி மனோகரன். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெயரையும் புகழையும் பெற்ற கண்மணி ஒரு கட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்காக வேறு ஒரு சேனலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கண்மணி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும்…… என்ற சீரியலில் மெயின் கேரக்டரில் நடிப்பதற்கான ப்ரோமோ வெளியாகியது. ஆனால் ப்ரோமோ வெளியாகி பல வாரங்கள் ஆகிய நிலையிலும் சீரியல் ஒளிபரப்பப்படும் தேதி குறிப்பிடாமல் இருந்து வருகின்றன. இதனை அடுத்து கண்மணி ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் வெளியாகாத எனவும் குழம்பி வருகின்றனர்.

kanmani
kanmani

ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது உண்மை என்னவென்றால் சில சீரியல்களின் காரணமாக இந்த சீரியல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாத இறுதியில் இந்த தொடர் தொடங்கிவிடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment