பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி மீண்டும் வந்தாச்சு.! விஜய் டிவி-யை விட்டு உங்களால் போய்விட முடியுமா என ரசிகர்கள் கமெண்ட்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதனால் டிஆர்பிஇல் நல்ல இடத்தில் இருக்கிறது அந்த வகையில் ரசிகர்களின் பேவரட் சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா இந்த சீரியலில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ரோஷினி வந்தாச்சு என தங்களுடைய சந்தோஷத்தை சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ரோஷ்நி ஹரிப்ரியன். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினி அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.

ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக ரோஷ்நி ஹரிப்ரியன் பாரதிகண்ணம்மா சீரியல் விட்டு விலகினார். இந்த சீரியலை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் இந்நிலையில் ரோஷினி கதாபாத்திரத்தில் வினிஷா நடித்து வந்தார். ஆனாலும் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள் அதனால் மீண்டும் ரோஷினி நடிக்க வருவார் என தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார்கள்.

ஆனால் ரோஷினி சினிமாவில் நடிக்க வேண்டும் என சீரியலை விட்டு விலகியதாக கூறினார் ஆனால் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை அதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை இந்த நிலையில் ரோஷ்னி ஹரிப்ரியன் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ரோஷினி திரும்ப சீரியலில் நடிக்க வரவில்லை ஆனால் விஜய் டிவியில் துவங்க இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3-ல்  கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 3 புரோமோ வெளியானது  அதில் கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா போன்றவர்கள் இடம் பெற்றுள்ளார்கள் ஆனால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த புகழ் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரப்போகிறார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய் டிவிக்கு திரும்பவும் வந்தாச்சு.  விஜய் டிவியை விட்டு போய் விட முடியுமா என்ன என கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment