பாகுபலி நடிகையை ஓவர்டேக் செய்யும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.! புகைப்படங்களைப் பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

சினிமாவை விட தற்பொழுது சின்னத்திரை சீரியல்களை பார்ப்பது தான் மக்கள்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள் ஏனென்றால் இந்த சின்னத்திரை சீரியல்கள் குடும்ப கதாபாத்திரங்களைக் கொண்டு உண்மையாக காட்டுவதன் மூலம் மகள்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவி தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக ஒளிபரப்பாகி வருவது பாரதிகண்ணம்மா இந்த சீரியலில் மக்களுக்கு மிகவும் பிடித்த பரிச்சயமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அருண் என்பவர் கதாநாயகனாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் மக்களுக்கு பிடிக்கிறது அந்த வகையில் இவர்கள் நடிப்பு திறமையை மக்கள் பாராட்டுவார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஃபரீனா இவரது நடிப்பு திறமை மக்களுக்கு மிகவும் பிடித்ததால் இவர் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.அதுமட்டுமல்லாமல் இவர் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

bharathi kannamma2
bharathi kannamma2

இந்நிலையில் இவர் வெள்ளித்திரையில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு உடையில் பலவிதமான போட்டோ ஷுட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன் மூலம் மக்கள்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படங்களில் இவர் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.

bharathi kannamma3
bharathi kannamma3

அதுமட்டுமல்லாமல் பாகுபலி அனுஷ்காவை போல் உடை அணிந்து பல நகைகளைப் போட்டுக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment