பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் , நடிகைகள் ஒருநாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு.? அதிலும் புதிய நடிகை வினுஷா தேவி NO.1

சின்னத்திரையில் பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மக்களின் வரவேற்பை பெற்று  டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னிலையில் வகித்து  வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் தற்போது புதிய கதைகளத்துடன் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

மேலும் இதில் சில வருடங்களாக பாரதி கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது சில வாரங்களாக இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஜெயிலில் இருந்த வெண்பாவும் திரும்பி வந்து பாரதி கண்ணம்மா இருவரை எப்படி பிரிக்கலாம்  என்று பல யோசனை செய்து வருகிறார்.

மேலும் இதில் ஹீரோயினாக முதலில் ரோஷினி என்னும் மாடலிங் துறையில் இருந்து வந்த நடிகை சிறப்பாக நடித்து வந்தார் அவருக்கு தற்போது வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் சில வந்தவண்ணமே உள்ளதால் பாரதிகண்ணம்மா தொடரிலிருந்து விடைபெற்று அவருக்கு பதில் தற்போது டிக் டாக் பிரபலம் வினுஷா தேவி என்ற நடிகை கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய் டிவி பிரபலம் நிஷா இந்த சீரியலில் புது என்ட்ரியாக வந்துள்ளார்.  பாரதியின் அம்மா சௌந்தர்யா கண்ணம்மாவை பார்த்துக் கொள்வதற்காக பக்கத்து வீட்டில் புதிதாக குடிவைத்துள்ளார். மேலும் நிஷா கண்ணம்மாவிடம் நெருங்கி பழகுகிறாள்  இவர் கண்ணம்மா பாரதி இருவரை சேர்த்து வைக்க பல யோசனை செய்து வருகிறார்.

தற்போது இந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் ஒரு நாளைய சம்பளம் குறித்த தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில்  ரூபாஸ்ரீ ரூ 15000, கதாநாயகன் அருண் பிரசாத் 20000, சீரியலின் நாயகி  வினுஷா தேவி 20000, துணை கதாநாயகி கண்மணி 9000, லிசா 8000, ரக்ஷா 8000, சுகேஷ் 8000, ஷெரின் 4000, ரிஷி கேஷ்  15000, செந்தில் குமாரி 5000

Leave a Comment