ஹீரோவாக மாறிய பாரதிகண்ணம்மா பிரபலம் – யாருன்னு தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் நம்பர் 1 சீரியல் பாரதிகண்ணம்மா தொடராகும். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதில் ஹீரோவாக அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினாக நடிகை வினுஷா தேவி என்ற பிரபலம் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தாலும் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் இதிலிருந்து பாதியிலே விலகி விடுகின்றன. ஆம் அந்த வகையில் ஹீரோயினாக முதலில் நடித்து வந்த ரோஷிணி ஹரிப்ரியன் வேறு சில வாய்ப்புகளின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகி விட்டனர்.

அவரைத் தொடர்ந்து தற்போது துணை கதாநாயகியாக நடித்து வந்தவர் கண்மணி மனோகரன் அவரும் இந்த சீரியலில் இருந்து விலகி அவருக்காக வேறு ஒரு பிரபலம் நடித்து வருகின்றனர். இதனிடையே பாரதி கண்ணம்மா சீரியலில் துணை கதாநாயகனாக முதலில் நடித்து வந்தவர்.

அகிலன் இவர் வெள்ளித்திரையில் டாப் நடிகரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதால் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். ஆம் சமீபத்தில் வெளியாகி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் அகிலன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர் தெலுங்கில் முதன்முதலில்  ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம் அதனை அகிலன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment