பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் “அகிலன்” ஹீரோவானார் – ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ.

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய பல நடிகர் நடிகைகளும் தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்து வருகின்றனர். அப்படி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன் சந்தானம் போன்ற பலரும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்களே..

அவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் 1 பாரதி கண்ணம்மா இந்த சீரியல் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாகும். மேலும் இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர்கள்.

அந்த வகையில் முதலில் பாரதிகண்ணம்மா சீரியலில் துணை கதாநாயகனாக நடித்து வந்தவர் அகிலன். இந்த சீரியல் மூலம் பிரபலம் அடைந்த பின்பு இவருக்கு வெள்ளித்திரையில் திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. பின்பு சினிமா துறையில் பயணிப்பதற்காக இந்த சீரியலில் இருந்தும் விலகியுள்ளார். அப்படி முதல் படமாக சமீபத்தில் கூட..

விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அகிலன். அதைத்தொடர்ந்து ஒரு தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் படக்குழு உடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

தற்போது அந்தப் படத்தின் பூஜை தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கும் என தெரியவருகிறது. இந்த நிலையில் அந்த படத்தின் பூஜை தொடங்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்து நடிகர் அகிலனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

akilan
akilan
akilan
akilan

Leave a Comment