இரண்டாம் குத்து விளம்பரத்தை பார்க்கவே கண் கூசுகிறது.! தனது பாணியில் எதிர்ப்பைத் தெரிவித்த பாரதிராஜா.!

0

2018 ஆம் ஆண்டு சந்தோஷ் பி  ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவெடுத்தார் சந்தோஷ்.

இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்து இயக்கி வருகிறார்கள் ஹீரோவாக நடிக்கிறார் சந்தோஸ் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலு ஷம்மு நடித்துள்ளார், சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இருந்தாலும் பல சமூக ஆர்வலர்கள் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசரில் நிறைய ஆபாச வசனங்களும் ஆபாச காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என  பலரும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வகையில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் கூறியதாவது, சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது, சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது, நேர்மையும் துணிவும் மிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது சாத்தியப்பட்டிருக்கிறது.

உலகெங்கும் தமிழர் பண்பாடு மண்ணின் மணம் பரப்புவது பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ  சாத்தியம் மற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரணமானதல்ல பல கலைஞர்கள் கட்டமைத்த கூடு. தார்மீகப் பொறுப்பு களோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காப்பது சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்ற செய்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

சினிமா வியாபாரம் தான் ஆனால் வாழைப்பழத்தை குறிகளாக செய்து அதை கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு வியாபாரம் வந்து நிற்பது வேதனையை செய்கிறது.

இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவை கட்ட அமைத்தார்கள்? சினிமா வாழ்க்கைமறையை சொல்லலாம் தப்பில்லை இலை மறை காய் மறையாக சரசங்கள் பேசலாம் ஆனால் இப்படி படுக்கை அறை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்த விதத்தில் சரி என்பது, நான் கலாச்சார சீர்கேடு என கூறும் நபர் அல்ல ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.

மேலும் இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா அவர்கள் இதை கண்டிக்க மாட்டார்கள். அவர்கள் கண்டிப்பாக இல்லையோ நான் இங்கு இருக்கும் மூத்தவர்களின் ஒருவன் என்ற முறையில் தண்டிப்பேன்.

இப்படி ஒரு ஆபாசம் தமிழ் திரை உலகிற்கு ஆகாது என கண்டிக்கிறேன் இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டும் வலியுறுத்துகிறேன், சமூக சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்ற அவர்கள் எத்தனை கற்பழிப்புகள் குழந்தை சிதைவுகள் போதாதா இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளை சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை நம் மக்களும் உணர்ந்து கொள்ளலாம்.