பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இதோ லேட்டஸ்ட் தகவல்.

சின்னத்திரை சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சிறப்பாக எடுத்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் பலருக்கும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.

இதனிடையில் இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக முதலில் நடித்துவந்த ரோஷினி ஹரிப்ரியன் அவரது நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி மக்கள் அனைவரிடமும் பிரபலம் அடைந்தார். மேலும் இந்த சீரியலில் ரோஷினி கர்ப்பமாக இருந்தபோது அவரது கணவர் பாரதி சந்தேகப்பட்டு பழியை சுமத்தியபோது கண்ணம்மா.

தன்மானத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்று திரிந்தது போன்ற காட்சிகள் மூலம் இந்த சீரியல் மக்களை தன் பக்கம் இழுத்து டிஆர்பி ரேட்டிங்கிளும் தொடர்ந்து சில வாரங்களாக முதல் இடத்திலே உள்ளது. தற்போது ரோஷினிக்கு வெள்ளித்திரையில் படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதால் இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து அண்மையில் தான் விலகியுள்ளார்.

இவர் விலகியதை அடுத்து தற்போது இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு வினுஷா தேவி என்ற பிரபலம் நடித்து வருகிறார்.  பாரதி கண்ணம்மா சீரியலில் 8 வருடங்களுக்கு மேலாக பிரிந்து இருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது கோர்ட்டின் முடிவின்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்  பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் வினுஷா தேவி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார். இதனிடையே வினுஷா தேவி பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. நடிகை வினுஷா தேவி பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 20000 ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம் என தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Leave a Comment

Exit mobile version