பாரதியின் அப்பாவால் அதிர்ச்சியில் கண்ணம்மா.? புதிய ட்விஸ்ட் உடன் பாரதி கண்ணம்மா 2 சீரியல் இந்த வார ப்ரோமோ..

Bharathi kannama serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் சௌந்தர்யாவை எதிர்த்து பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டதனால் சௌந்தர்யா இவர்களை வீட்டிற்குள் விடாமல் இருந்து வருகிறார். எனவே பாரதி வீட்டிற்கு வெளியில் சின்னதாக டென்ட் ஒன்றை போட்டு அதில் கண்ணம்மாவுடன் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சௌந்தர்யா பாரதியின் மேல் இருக்கும் கோபத்தில் தனது மொத்த சொத்துக்களையும் வெண்பா குடும்பத்தினர்களுக்கு எழுதி வைத்து விடுகிறார்.

இதனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். சௌந்தர்யா முட்டாள்தனமாக நம்பி வரும் அவருடைய அண்ணனும் சொத்துக்காக தான் இத்தனை நாளாக நாடகம் போட்டு வந்துள்ளார் என்பது சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கண்ணம்மாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதாவது பாரதி கண்ணம்மாவின் கண்ணை மூடி வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு என கேட்க அதற்கு பாரதி நீ வீட்டிற்கு வந்ததிலிருந்து விளக்கு ஏற்றவே இல்லை எனவே விளக்கு ஏற்று கண்ணம்மா என சொல்ல கண்ணம்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

பிறகு இதுதான் அப்பாவின் புகைப்படம் எனக் கூற கண்ணம்மாவும் திறக்கிறார் இவனா இவனால் தான் நம்ம வாழ்க்கையே நாசமா போச்சு என நினைக்க அதிர்ச்சி அடைகிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. இவ்வாறு பாரதியின் அப்பாவிற்கும் கண்ணம்மா சின்ன வயதில் இருக்கும் பொழுது ஏற்பட்ட ஆபத்திற்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது அது குறித்து இனி வரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment