கண்ணம்மாவை பாரதி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் லக்ஷ்மி.! மகிழ்ச்சியில் சௌந்தர்யா..

0
lakshmi 1
lakshmi 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து டிஆர்பி யில் முன்னணி சீரியலாக இடம்பெற்று வந்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஃபேவரட் சீரியலாக பாரதிகண்ணம்மா சீரியல் வருகிறது. மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அவர்களின் ஆதரவை நன்றாகவே கொடுத்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவை தவறாக புரிந்து கொண்டதால் எட்டு வருடங்களுக்கு மேல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பாரதிகண்ணம்மா சந்தித்து இவர்களுக்கிடையே பாதி நேரங்களில் சண்டையாகவும் பாதி நேரங்களில் காதலாகவும் நடந்து வருகிறது. ஆனால் என்ன நடந்தாலும் பாரதிக்கு கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.

இந்நிலையில் சில வாரங்களாக பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்து வருவதால் இவர்களுக்கிடையில் சின்னச் சின்னதாக காதல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதையெல்லாம் மறைத்துக்கொள்ளும் பாரதி ஒரு குழந்தையை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இறங்கிய இருவரும் நல்ல விதமாக குழந்தையை காப்பாற்றினார்கள். இவர்களுக்கிடையில் சிறிதளவிலான நெருக்கம் ஏற்பட்டு வருகிறது.

எனவே, ஹேமா பாரதியிடமும் லட்சுமி கண்ணம்மாவிடமும் தனித் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இதைத் தொடர்ந்து கண்ணம்மா தான் அம்மா என்று தெரியாத ஹேமா ஆனால் லட்சுமிக்கு அப்பா பாரதிதான் என்ற உண்மை தெரிந்தது அப்போது கண்ணம்மாவிடம் நம்ம அப்பா வீட்டிற்கு போகலாம் என்று கேட்கிறார் அதற்கு கண்ணம்மா மறுத்து பேசுகிறார். ஆனால் லட்சுமி பிடிவாதமாக அப்பா வீட்டிற்கு போயே ஆக வேண்டும் என்று கூறுகிறார். இந்த சிறு வயதிலே எப்படியெல்லாம் யோசித்து பேசுகிறார் என்று கண்ணம்மாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதனையடுத்து கண்ணம்மாவின் முடிவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் பாரதி எல்லா விதமான வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டுக்கு செல்கிறார். அப்போது பாரதியை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள். எல்லோரும் சந்தோஷத்தில் இருக்கும் நிலையில் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.