பாரதி கண்ணம்மா சீரியலைப் பற்றி அன்பான வேண்டுகோள் வைத்த ரசிகர்கள்.! ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுமா விஜய் டிவி.?

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சியாக விஜய் டிவி விளங்குகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் தொடர்ந்து TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.கொரோனாவின் அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் சமீபகாலங்களாக சீரியல் எடுப்பதற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்து வருகிறது எனவே இரண்டு சீரியல்களை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறார்கள்.

அந்த வகையில் பாரதிகண்ணம்மா மற்றும் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ராஜா ராணி 2 இந்த இரண்டு சீரியல்களையும் சமீபத்தில் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பிய தந்தார்கள். இதனை தற்போழுது மீண்டும் இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வெவ்வேறு கதை உள்ள இரண்டு சீரியல்களையும் இயக்குபவர் ஒரே இயக்குனர் தான். எனவே இந்த வாரம் எப்படி அவர்கள் மீட் பண்ணி கொள்கிறார்கள் அதோடு ஒரே இடத்தில் சங்கமிக்கும் காட்சி போன்றவற்றை வைத்து இந்த வாரம் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது.

ஆனால் இந்த எபிசோடு ரசிகர்களின் விருப்பத்தை பெரியதாக நிறைவேற்றாத காரணத்தினால் மீண்டும் பாரதி கண்ணமா சீரியலின் பழைய எபிசோடுகளை ஒளிபரப்புங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்கள் ரசிகர்கள்.  இந்த வேண்டுகோளை விஜய் டிவி நிறைவேற்றுமா.? என்று பொறுத்திருந்து  பார்ப்போம்.

Leave a Comment