இனி பாரதிகண்ணம்மா சீரியல் இனி அவ்ளோதானா.! வெளியான வீடியோவால் கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியல் மற்றும் நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் என்றால் பாரதிகண்ணம்மா தொடரும் ஒன்று.

இந்த சீரியல் பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  பல ரசிகர்கள் பாரதிகண்ணம்மா சீரியல் முடியப் போகிறதா என்று கேள்வி எழுப்பி வந்தார்கள் இந்த நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடரைப் பார்த்துவிட்டு அடுத்து என்ன நடக்கப்போகிறது அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என பல எதிர்பார்ப்புகளுடன் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதேபோல் சீரியலை மக்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள். பாரதிகண்ணம்மா சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தன்னுடன் இருக்க மற்றொரு குழந்தை எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள பல முயற்சிகளை செய்வார். இவரின் சூழ்நிலையை வெண்பா பயன்படுத்திக் கொள்வார்.

bharathi kannama
bharathi kannama

அப்பொழுது சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் ஏதோ ஒரு விஷயத்தில் எக்குத்தப்பாக பாரதியிடம் சிக்கிக் கொள்கிறார்கள் இப்படி பல திருப்புமுனைகள் உடன் இந்த சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புரோமோவால் பாரதி மனதை மாற்றிக்கொண்டு கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ளுமாறு தனது பெற்றோர்களிடம் பேசி இருக்கிறார் இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் சில வாரங்களில் பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்து விடுமோ என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுபோல் ப்ரோமோவை வெளியிட்டு விட்டு பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல் சண்டை வருமோ என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மொத்தத்தில் இந்த வாரத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் வேற லெவல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment