மஞ்சக் காட்டு மைனா போல் ரசிகர்களை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை வினுஷா தேவி.!

0
vinusha-devi-1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகமான பாரதிகண்ணம்மாவின் இன்றைய எபிசோட் என்னவென்று தெரியுமா இதோ, லட்சுமி, அப்பா என பாரதியை கூறியதால் மிகவும் கோபத்துடன் வீட்டிற்கு சென்ற பாரதி சௌந்தர்யாவிடம் மிகவும் கோபமாக கத்துகிறார், இன்னும் என்னென்ன செய்ய ப்ளான் பண்ணி இருக்கீங்க, இது குடும்பமே இல்லை இது ஒரு சாக்கடை, ஒரு சின்ன குழந்தைகிட்ட என்ன ஒரு வில்லனா சித்தரிச்சிருக்கீங்க, இன்னும் எவ்ளோ செய்யப் போறீங்க என கோபத்தில் கண்டமேனிக்கு பேசுகிறார் பாரதி.

மறுபக்கம் இந்த விஷயத்தினால் சோகமாக அமர்ந்திருந்த லட்சுமியிடம் வந்த ஹேமா டாடி வந்தாங்க நீ பார்த்தியா, சமையல் அம்மா வந்தாங்களா நான் பார்க்கவே இல்லை என சிறு சோகத்துடன் கூறுகிறார். மேலும் உனக்கு அப்பா சீக்கிரம் கிடைப்பாரு நீ கவலைப்படாதே என கூறுகிறார் ஹேமா.எனக்கு அப்பா டாக்டர் அப்பா தான் எனக் கூற வரும் லட்சுமி தனக்குள்ளேயே மூடி மறைத்துக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் கண்ணமாவிற்கு ஃபோன் செய்து சௌந்தர்யா நடந்த அனைத்தையும் கூறுகிறார்,இதனைக் கேட்ட கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார்.அதன் பிறகு, எவ்வளவு நாள் தான் அவளும் தன் தந்தை என்று தெரிந்தும் பேசாமல் இருப்பாள் என்னை போல் அவளும் உணர்ச்சிவசப்பட்டு இருப்பாள் என்று கூறுகிறார். இதன் பிறகு சௌந்தர்யா எல்லாம் சரியாக நடக்கும் கவலை படாதே என்று கூறுகிறார்.

vinusha devi 1
vinusha devi 1

இந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு சென்ற பாரதி கண்ணம்மாவிடம் ஏன் நான் தான் அப்பா என்று சொன்னாய் எவன் அப்பனோ அவனைப் போய் காட்ட வேண்டியது தானே இனிமேல் லட்சுமியிடம் கூறு என்னை அப்பா என்று கூப்பிடக்கூடாது என்று, அதற்கு கண்ணம்மா நான் ஏன் கூற வேண்டும் நான் அப்படி கூற மாட்டேன் என்று கூறுகிறார்.

vinusha devi 1
vinusha devi 1

அதைத்தொடர்ந்து பாரதி ஹேமா நான் பெத்த பொண்ணு அவளை என்கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைச்சீங்கன்னா, அவள உங்க கிட்ட இருந்து மொத்தமா பிரிச்சிடுவேன் என்று கூறுகிறார். இதனைக் கேட்ட கண்ணம்மா லட்சுமியும் நம்மளுடைய பொண்ணு என்று கூறிவிட்டு வெளியே செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

vinusha devi 1
vinusha devi 1