தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்கள். மேலும் சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமடைந்து அதன் பிறகு சினிமாவில் அறிமுகம் ஆவதை பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை வினுஷா இவர் சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமடைந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார். இவரை ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்களின் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தற்பொழுது தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
மேலும் இவருடைய நெருங்கிய தோழியான சுந்தரி கேப்ரில்லாவும் இவரும் இணைந்து டிக் டாக் செய்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்கள் இவர்கள் மாடலிங் துறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வினுஷா பாரதி கண்ணம்மா சீரியல் நடிப்பதற்கு முன்பு இரவு நேரத்தில் ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டே சீரியலில் நடித்து வந்தார்.

தற்பொழுது முழுநேரம் சீரியல்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலை தற்பொழுது சுந்தரி கேப்ரில்லா மற்றும் வினுஷா தேவி இருவரும் இணைந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் வினுஷா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது தாவணி பாவாடைகள் மல்லிகை பூவுடன் கிராமத்து பெண் போல் இருக்கும் அவருடைய அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.