பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா.! இதோ அவரே வெளியிட்ட வீடியோ

0

பொதுவாக தமிழ் தொலைக்காட்சிகளுக்கிடையே டி ஆர் பி இல் முதல் இடம் பிடிப்பதற்காக பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் சன் தொலைக்காட்சி நிறுவனம் சீரியல்களை ஒளிபரப்பி டி ஆர் பி இல் முதலிடத்தில் இருக்கிறார்கள் சன் தொலைக்காட்சியை ஓவர்டேக் செய்வதற்காக விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், கலர் என பல தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் படத்தின் தலைப்பை சீரியல் தலைப்பாக வைத்து வெற்றி கண்டு  வருகிறார்கள். அந்த வகையில் சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜா ராணி, மௌனராகம், கடைக்குட்டி சிங்கம் என பல சீரியல்களும் சினிமா டைட்டிலை வைத்துதான் ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பி வரும் சீரியல்களில் பாரதிகண்ணம்மா சீரியலும் ஒன்று இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் சமீபகாலமாக டிஆர்பி யில் வேற லெவலில் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் மீம் கிரியேட்டர் தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். கண்ணமா வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு நடந்து செல்வதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தவர்கள். கண்ணமா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்ஸ் வேற லெவல் வைரலானது.  இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா ஆரம்பத்தில் புதுயுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த அழகு சீரியலிலும் நடித்து வந்தார். என்னதான் பல சீரியலில் நடித்தாலும் இவருக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது பாரதிகண்ணம்மா சீரியல் தான் இந்தநிலையில் ரகுமான் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் பரினா. இந்த நிலையில் பரீனா இனி பாரதி கண்ணம்மா சீரியல் வரமாட்டாரா என பல ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள்.

இது குறித்து அவரிடமே கேள்வி கேட்டு பொழுது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வெண்பா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் அது வேறு யாரும் கிடையாது பரினா தான். நான் கண்டிப்பாக அந்த சீரியலில் நடிப்பேன் என கூறியுள்ளார்.