கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.!

0

தமிழ் தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் சன் தொலைக்காட்சியை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல தொலைகாட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

அதிலும் சமீப காலமாக படத்தின் பெயர்களில் சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் சின்ன தம்பி, பெரிய தம்பி, ராஜா ராணி, மௌனராகம், கடைக்குட்டி சிங்கம் என அனைத்தும் சினிமாவின் டைட்டிலை வைத்து தான் ஒளிபரப்பி வருகிறார்கள் இந்த சீரியல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலின் டிஆர்பி வேற லெவல் அதிகரித்தது. அப்படியிருக்கும் நிலையில் சமீபத்தில் தான் கண்ணம்மா விற்கு இரட்டை குழந்தை பிறந்தது ஆனால் ஸ்பெஷல் எபிசோட் என்று மூன்று மணி நேரத்தை ஒளிபரப்பு செய்து 3 மணி நேரத்தில் எட்டு வருடங்களை கடந்து விட்டதாக காண்பித்தார்கள். இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா இவர் ஆரம்பத்தில் வரும் புதுயுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

bharathi kannama serial actress
bharathi kannama serial actress

அதுமட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் இவர் அழகு என்ற சீரியலிலும் நடித்துள்ளார். என்னதான் இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரும் புகழும் பெற்று கொடுத்தது பாரதிகண்ணம்மா சீரியல் தான். அப்படியிருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரகுமான் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இந்த நிலையில் பரினா கர்ப்பமாக இருக்கிறார்.

தன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நான்கு வருட கனவு என குறிப்பிட்டுள்ளார். இதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

bharathi kannama serial actress
bharathi kannama serial actress