பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் புதிய கெட்டப்.! வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களுக்கு பிடித்த சீரியலாக இருந்து வருகிறது அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுகிறது.  பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் ஏழு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் இன்னும் ஒன்று சேராமல் இருக்கும் நிலையில் ஒரு புது வழி பிறக்க போவதாக ப்ரமோ வெளியாகியுள்ளது.

இந்த பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது அது மட்டும் இல்லாமல் இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என பலரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்த மாதிரி தெரியவில்லை.

அதனால் மக்களின் எண்ணம் எப்படியாவது சீரியல் முடிந்தால் சரிதான் என எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு காரணம் இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி படங்களில் நடிக்கப் போவதாக கூறி சீரியலை விட்டு விலகினார் இதனைத் தொடர்ந்து அகிலன், அஞ்சலி ஆகியோர் சீரியலை விட்டு விலகிவிட்டார்கள்.

அதனால் ரசிகர்கள் பலரும் சீரியல் மீது இருந்த ஆர்வம் குறைந்து  விட்டது.  இந்த நிலையில் புது கண்ணமாவாக வினுஷா அவர்கள் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். இவர் பார்ப்பதற்கு பழைய கண்ணம்மா ரோஷினி போலவே ஒரு சாயலில் இருக்கிறார். அதனால் இவரை விரைவில் பழைய கண்ணம்மா போல் ஏற்றுக் கொள்வார்கள் ரசிகர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தொடரில் கண்ணம்மாவின் பிறந்த நாளன்று நடந்த சம்பவங்கள் எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது அதேபோல் ஹேமா போட்ட திட்டமும் ஏமாற்றத்தில் முடிந்தது. இந்நிலையில் தற்பொழுது லக்ஷ்மியின் அப்பா யார் என்பது எபிசோட் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் புதிய கண்ணம்மா வினுஷா அவர்கள்  சூட்டிங் ஸ்பாட்டில் புதுவிதமான லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ

https://www.youtube.com/watch?v=h1OKq19w6_o

Leave a Comment