பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா.! அப்போ மாசத்துக்கு இத்தனை லட்சமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டாப் சீரியலாக ஓடிக்கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

அதோடு இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளும் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மாவை பாரதி சந்தேகப்பட்டால் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி விடுவார் இதன் காரணமாக பை ஒன்றை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றும் எபிசோடு ரசிகர்களால் பெரிதும் கலாய்க்கப்பட்டது.

கதாநாயகனான அருண் மற்றும் கதாநாயகியான ரோஷினி இருவரும் தங்களது சிறந்த நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த சீரியல் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு இவர்களும் ஒரு முக்கிய காரணம் இவர்களைத் தொடர்ந்துத் சௌந்தர்யா, வேணு, வெண்பா, அஞ்சலி, அகிலன், சௌந்தர்யா லக்ஷ்மி, ஹேமா, பாக்கியலட்சுமி  போன்றவர்களும் தங்களது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது கண்ணம்மா பாரதியிடம் நமக்கு இரண்டு இரட்டைப் பிள்ளைகள் ஆனால் ஒரு குழந்தை தான் உள்ளது மற்றொரு குழந்தையை யாரோ கடத்தி வைத்துக் கொண்டு என்னை மிரட்டுகிறார்கள் என்று கூறும் எபிசோட்கள் தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாகவும் பல சுவாரசியமான காட்சிகளும் இடம்பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்,நடிகைகளுக்கும் எவ்வளவு சம்பளம் என்ற பட்டியல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த பட்டியலை தற்போது பார்ப்போம்.

அருண் பிரசாத்(பாரதி ) – ரூபாய் 20,000

ரோஷினி (கண்ணம்மா) – ரூபாய் 20,000

ரூபாஸ்ரீ ( சௌந்தர்யா ) – ரூபாய் 15,000

ரிஷிகேஷவ் (வேணு) – ரூபாய் 12,000

பரினா (வெண்பா ) – ரூபாய் 10,000

சுகேஷ் ராஜேந்திரன்  (அகிலன் ) – ரூபாய் 10,000

கண்மணி ( அஞ்சலி)  – ரூபாய் 9000

செந்தில்குமாரி ( பாக்கியலட்சுமி) – 5,000

Leave a Comment