பாரதி கண்ணம்மா சீரியலில் சவுந்தரிய லக்ஷ்மி கேரக்டரில் நடிக்கும் குழந்தை யார் தெரியுமா.? அட இவர் இந்த பிரபல நடிகர் திரைப்படத்தில் நடித்துள்ளாரா.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் டிவிதான் தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஒரு பெண் தனது வாழ்க்கையில் எவ்வளவு தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

அந்த வகையில் இடையில் இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியை சந்தேகப்படும் கதாநாயகி கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியில் வந்து விடுவார்.  அதன் பிறகு தனியாக ரோடு ரோடாக ஒரு பையை தூக்கிக் கொண்டு அலைவார் இந்த எபிசோடு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கலைக்கப்பட்டது.

அதன் பிறகு எட்டு வருடங்கள் கழித்து என்று கூறி கண்ணம்மாவிற்கு 8 வயதுள்ள ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார். கண்ணம்மாவுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் மற்றொரு குழந்தையை கண்ணம்மாவின் மாமியார் மற்றும் கணவருடன் வளர்த்து வருகிறார்.

அந்த வகையில் எப்படி அந்த குழந்தைகள் ஒன்று சேர்வார்கள் என்பதை மையமாக வைத்து தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது  இரண்டு பெண் குழந்தைகள் புதிதாக இந்த சீரியலுக்கு அறிமுகமாகி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கண்ணம்மாவிடம் இருக்கும் பெண் குழந்தை சௌந்தரி லக்ஷ்மி என்ற கேரக்டரில் நடித்து வருகிறது.

இந்த சீரியளுக்கும் முன்பு இந்த குழந்தை கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளிவந்த ரெமோ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.  அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

lakshmi
lakshmi
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment