ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலத்திற்கு.! வெளியான தகவல்

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்கள் ரசிகர்களிடமும் மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் மக்களிடையே மிகவும் பிரபலமாகி ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான் இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு பிரபலங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் பாரதிக்கு பென் ரசிகை ஏராளம்.

இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்தே பாரதிகண்ணம்மா அவர்களுக்கு சப்போர்ட் செய்தது குடும்பத்தினரை எதிர்த்து தன்னுடைய காதலுக்காக நின்றது என அனைத்து காட்சிகளும் ரசிகர்கள் மனதிலும் மக்கள் மனதிலும் ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தியது. சீரியலில் பாரதி எப்படி நடித்துள்ளார் அப்படித்தான் சொந்த வாழ்க்கையிலும் இருப்பார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துவரும் பாரதியின் உண்மையான பெயர் அருண் இவர் சேலம் மாவட்டத்திலுள்ள மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் அதேபோல் சென்னையில் உள்ள கிறிஸ்துவ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். அதனால் அது தொடர்பான பணிகளிலேயே செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வந்தார் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பல குறும்படங்களில் நடித்துள்ளார் அருண்.

இவர் நடித்துள்ள குறும்படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. ஏனோ வானிலை மாறுதே, மதி மயங்கினேன், கள்ளன், ஏதோ மாயம் செய்தாய், யானும் தீயவன், பகல் கனவு ஆகிய குறும்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. மேலும் மேயாதமான் திரைப்படத்தில் வைபவ் அவர்களுக்கு நண்பனாக நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

bharathi kannama arun
bharathi kannama arun

அதன் பிறகுதான் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் அருண் நடிப்பதற்கு யோசித்தார் ஏனென்றால் வெள்ளித்திரையில் முகத்தை பதிய வைத்துவிட்டு சின்னத்திரையில் நடிப்பதா என கொஞ்சம் யோசித்தார் அதன் பிறகு தன்னுடைய தெளிவான முடிவுக்கு பிறகு தான் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகி பல ரசிகர்களைக் கவர்ந்தார் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறாராம் அருண்.

தற்பொழுது சீரியல் நடிகராக இருக்கும் அருண் வெள்ளித்திரையில் விரைவில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.