ரசிகர்களை உற்சாகப்படுத்திய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் என்ன ஸ்பெஷல் தெரியுமா.? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

0

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும்  போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவி தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் சின்னத்திரையில் அதிக பார்வையாளர்களை கொண்ட பல சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

இதனை தொடர்ந்து சமீபத்தில் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த சீரியல் தான் ராஜா ராணி 2.இந்த சீரியல் தற்பொழுது தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இந்த இரண்டு சீரியலும் சமீபத்தில்தான் மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது முடிந்தது.

இந்நிலையில் வெவ்வேறு கதை  உள்ள இந்த இரண்டு சீரியல்களையும் ஒரே இயக்குனர் தான் இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இந்த இரண்டு சீரியலும் மீண்டும்  ஒன்றிணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த வாரம் முழுவதும் இந்த இரண்டு சீரியல்களின் எபிசோடு தான் ஒளிபரப்பாக உள்ளது. அந்த வகையில்  இந்த இரண்டு சீரியல்களும் சந்திக்கும்பொழுது மோதலில் ஆரம்பித்து அதன் பிறகு சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் அந்த புரோமோ தான் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

 இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.