80-களில் கொடி கட்டி பறந்த பானுப்ரியா..! சொத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்த பரிதாபமான நிலை..

80-களின் காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை பானுப்பிரியா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் அதே போல் இவருடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டி போடுவார்கள்.

தமிழில் முன்னணி நடிகர்களான சத்தியராஜ் சிவக்குமார் கார்த்திக் விஜயகாந்த் என அனைவரின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதேபோல் சினிமாவை தாண்டி தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார் இப்படி கொடிகட்டி பறந்த பானுப்பிரியா கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட கதையும் உண்டு.

கோடிக்கணக்கில் பணத்தை பார்த்த இந்த நடிகை, துரோகத்தால் துவண்டு, தன்னுடைய வீடு, வாசல் போன்றவற்றை இழந்து நடுத்தெருவுக்கு வந்த நிகழ்வும் உண்டு. நடிகை பானுப்ரியா படங்களில் நடித்து ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்தும், அதை ரியல் எஸ்டேட், சொந்த படம் என்று இழந்தார்..

சகோதரரை வைத்து படங்களை எடுத்து, மொத்த சொத்துக்களையும் இழந்தார். பெரும்பாலான நடிகைகள் உச்சத்தில் இருக்கும்போது தங்களுக்கு எவ்வளவு பணம் வருகிறது? எவ்வளவு செலவாகிறது? என்பதை தெரிந்து வைத்து கொள்வதில்லை.. அப்படித்தான் பானுப்பிரியாவும்.