பாகுபலி படத்தில் நடித்த ராணாவா இது.! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.

0
rana
rana

பாகுபலி திரைப்படத்தில் பல்வால் தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் ராணா டகுபதி, இவர் 1984 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன் ஆவார், அதுமட்டுமல்லாமல் நடிகர் வெங்கடேஷ் அவர்களின் அண்ணன் மகனும் ஆவார்.

இப்படி இவரின் குடும்பமே சினிமா துறையில் இருப்பவர்கள், ராணா தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிபவர், இவர் தமிழில் அஜித் அவர்களின் ஆரம்பம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ranaa
ranaa

பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், ஆனால் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்று கூறும் அளவிற்கு மாறி விட்டார்.

பாகுபலி படத்தின் மூலம் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகியது, இவர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் காத்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் ராணா எச்டிஎப்சி விளம்பரத்திற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் அதிரடியாக உடல் எடையைக் குறைத்துள்ளார் என்பது தெரிகிறது, அவள் எதற்காக குறைத்துள்ளார் என்பது தெரியவில்லை அதனால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் என்ன ஆச்சு உங்களுக்கு.? ஏதேனும் பிரச்சினையா? நல்லாதானே இருந்தீர்கள் என பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ranaa
ranaa