திரைக்கதை டக்கராக இருந்தும் மண்ணைக்கவ்விய 10 திரைப்படங்கள்.! இந்த முன்னணி நடிகரையே இரண்டு முறை அதல பாதாளத்திற்கு அனுப்பிய ரசிகர்கள்.

movie-list
movie-list

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணம் நல்ல கதை அமைய வேண்டும் அல்லது முன்னணி நடிகர்கள் அந்த திரைப்படத்தில் நடித்தால் ஹிட் அடைந்து விடுகின்றன. அது மட்டுமில்லாமல் ஒரு சில புதுமுக நடிகர்கள் சில திரைப்படங்களில் நடித்த உடன் ஹிட்டடித்து விடுகின்றன.

மேலும் டாப்பு டக்கர் ஆக இருந்தும் புதுமுகங்கள் நடித்து மண்ணைக்கவ்விய திரைப்படங்கள் சில இருக்கின்றன அவை என்னென்ன திரைப்படம் என்று இங்கே காணலாம்.

அரண் – அரண் திரைப்படம் எல்லையை பாதுகாக்கும் வீரர்கள் கஷ்டப்படும் நிலைமையை மையமாக வைத்து திரைக்கதை இயக்கி இருப்பார். அதிலும் குறிப்பாக காஷ்மீர் எல்லையில் மக்கள் பயந்து பயந்து வாழும் வாழ்க்கையை தத்ரூபமாக படத்தில் காட்டினார்கள் கிளைமாக்ஸ் காட்சியில் ஜீவா இறந்துவிடுவார் ஆனாலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வில்லை.

இருவர்- இருவர் திரைப்படம் மணிரத்தினம் இயக்கிய திரைப்படம் இந்த திரைப்படத்தில் மோகன்லால் ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், கவுதமி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு சரியாக ப்ரமோஷன் செய்யாததால் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை அதனால் இந்த திரைப் படம் தோல்வியை தழுவியது.

குக்கூ – மாளவிகா நாயர், அட்டகத்தி தினேஷ் ராஜூமுருகன் ஆகியோர்கள் நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம்தான் குக்கூ. இந்த திரைப்படத்தில்  அட்டகத்தி தினேஷ் கண்ணு தெரியாதது போல நடித்து இருப்பார் அவருக்கு ஜோடியாக தான் மாளவிகா நாயர் கண்ணு தெரியாமல் நடித்திருப்பார் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தென்னவன் – விஜயகாந்த் நடிப்பில் நந்தகுமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் தென்னவன் இத்திரைப்படத்தில் விஜயகாந்திற்கு ஜோடியாக கிரண் நடித்திருப்பார் தேர்தல் அதிகாரியாக நடித்த விஜயகாந்த் 5 கட்டுப்பாட்டு விதிகளை கூறுவார். அதாவது ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் நிற்கக்கூடாது. இடைத்தேர்தல் பதவியில் இருக்கும் யாரும் கேன்வாஸில் பண்ணக்கூடாது.

அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் இல்லை என்றால் அரஸ்ட் கேபிள் ரேஷன் கார்டு என அனைத்தையும் கட் செய்யப்படும். அதேபோல் கொலை கொள்ளை கேசில் சிக்கினால் அவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது. அதேபோல்  எம்எல்ஏ சரியாக வேலை செய்யாவிட்டால் பதவி விலக செய்யலாம் என ஐந்து விதிமுறைகளை கூறி வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதேபோல் மகாநதி  இந்த திரைப்படம் கிரைமை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் விருது ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றியடைய முடியவில்லை ஆனால் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது மற்றும் பெஸ்ட் ஆடியோ கிராப் போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டது. படத்தின் கதை நன்றாக அமைந்து இருந்து ரசிகர்களிடம் பாராட்டையும் பெற்றது.

அன்பே சிவம் –  கமலஹாசன் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் அன்பேசிவம் இந்த திரைப்படம் மனிதநேயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் வசனங்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டது. இந்த திரைப்படம் புரிந்த ரசிகர்களிடம் பாராட்டை பெற்றாலும் பல ரசிகர்களுக்கு இந்த திரைப்படத்தின் கதை புரியாமல் போனது அதனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதேபோல்தான் கண்ணத்தில் முத்தமிட்டால், இறைவி, பேரன்பு, என்னை தெரியுமா. என  பல திரைப்படங்களும் கதை நன்றாக அமைந்து தோல்வியை தழுவிய திரைப்படங்களாக கருதப்படுகின்றன.