தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த செல்வராகவனின் திரைப்படங்கள்.! உங்களுக்கு பிடித்த படம் எது.?

செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அதேபோல் தமிழ் ரசிகர்களுக்கு சிறந்த படத்தை கொடுப்பவர். அந்த வகையில் இதுவரை செல்வராகவன் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த ஹிட் திரைப்படங்கள்.

1. காதல் கொண்டேன் – செல்வராகவன் இயக்கிய முதல் திரைப்படம். செல்வராகவன் தான் இயக்கிய முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாக்கியவர். இந்த படத்தின் மூலம் செல்வராகவனுக்கு பல பிரபலங்களால் பாராட்டப்பட்டார்.

2.7/ஜி ரெயின்போ காலனி – காதல் கதை படமாக வெளியாகி தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்று பிரபலமானது. ஒரு நடுத்தரமான குடும்பத்தில் நடக்கும் காதல் கதையாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தது.

3.புதுப்பேட்டை – ரவுடிசத்தை கருத்தில் கொண்டு ஒரு கேங்ஸ்டார் நிறைந்த சுவாரசிய அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தில் உள்ள வசனங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

4.ஆயிரத்தில் ஒருவன் – இந்த திரைப்படம் அங்கீகார பூர்வமாக வெற்றியையும். வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இத்திரைப்படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் வரலாறு பற்றிய படமாக அமைந்திருந்தது.

5.மயக்கம் என்ன – தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் சிறந்த திரைப்படத்திற்கான பல விருதுகளை பெற்றுள்ளார் செல்வராகவன்.

Leave a Comment