நம்பி போனேன் மோசம் பண்ணிட்டான்.! தாலி கட்டவில்லை கையில் குழந்தையுடன் இளம்பெண்.!

0

காதலித்த பெண்ணை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்து பின் திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றித்திரிந்து வருகின்றனர் இளைஞர்கள். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகே அமைந்துள்ள கிராமம் சிறுவாடி இந்த கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார் இவருடைய மகனின் பெயர் பொன்னுசாமி.

அவருக்கு  வயது (21) அதே கிராமத்தில் வசித்து வருவர் பிரியா இவருக்கு வயது (19)  இவர்கள் இருவரும் ஒரு வருடமாக பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக பொன்னுசாமி பிரியாவிடம் கூறியுள்ளார்.பொன்னுசாமி கூறிய வார்த்தையை நம்பி பிரியா உடல் உறவு வைத்துக்கொண்டார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளுமாறு பிரியா பொன்னுசாமியிடம் பலமுறை கூறி உள்ளார்.

ஆனால் பொண்ணுசமி திருமணத்தை தள்ளிப் போட்டு கொட்டுக் கொண்டே நிலையில் அவர் கர்ப்பமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரியாவுக்கு 15 நாட்களுக்கு முன்பதாக பெண் குழந்தையும் பிறந்தது.மீண்டும் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு பொன்னுசாமியிடம் போய் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார்.

ஆனால் பொன்னுசாமி நான் நிச்சயம் உன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என கூறியதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் விட்டார் இதனையடுத்து பிரிய அவர்கள் திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் பொன்னுசாமியை அழைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் இச்செய்தியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.