எனக்கு பின்னால் இருப்பவர் ரசிகர்கள் அல்ல.. மேடையில் அதிரடியாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! தீயாய் பரவும் செய்தி.

0

திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இன்னும் ஹீரோ என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு வலம் வருகிறார் தற்போது இவரது நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்படுகிறது. மேலும் இந்த திரைப் படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது தாறுமாறாக எகிறி தான் உள்ளது காரணம் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தாண்டி மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது தற்போது அதுவே படத்திற்கான வலுவாகவே பார்க்கப்படுகிறது.

ரஜினியுடன் சேர்ந்து மீனா குஷ்பு போன்ற 90 காலகட்ட நடிகைகளில் இந்த படத்தில் இணைந்துள்ளனர் மேலும் யோகி பாபு போன்ற மிகப் பெரிய போட்டாலும் இணைந்து இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் மேடையில் பேசிய ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது அவர் மேடைப்பேச்சு ஒன்றில் தன்னுடைய ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார் அவர் கூறியது. எனக்கு இருப்பது ரசிகர்கள் இல்லை வெறியர்கள் அந்த அளவிற்கு என் மீது பாசத்தை வைத்து உள்ளார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்கள் குறித்து பெருமையாக பேசினார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து தீயாய் பரப்பி வருகின்றனர்.