திருமணம் ஆவதற்கு முன்பாகவே வருங்கால கணவருடன் காரில் லூட்டி அடித்த வனிதா.! வைரலாகும் புகைப்படம்.

வெள்ளித்திரை மற்றும்  சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிக்கொண்டு வருபவர்தான் வனிதா. இவர் வெள்ளித்திரையில் முதலில் பயணித்தார் என்பது குறிபிடத்தக்கது அந்த வகையில் தளபதி விஜயுடன் இணைந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அதைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில்நடித்தார்.

அந்தவகையில் இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி ,கமல் போன்றவர்களின் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் பிரபலமடைய தொடங்கினார் இருப்பினும் ஒரு காலகட்டத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் திசை திரும்பி தனது பயணத்தை மேற்கொண்டார் அந்த வகையில் இவர் சின்னத்திரை தொலைக்காட்சியில் சண்டே சமையல் ,சக்தி கொடு, ஸ்டார் டே அவுட், போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும், கெஸ்ட் ஆகவும் வந்து நம்மை மகிழச் செய்தார் வனிதா.

இடையில் மீடியாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தாலும் அவரை மீண்டும் அழைத்தது பிக் பாஸ் இந்த சீசனில் தனது நேர்மையான நடத்தையின் வலம் வந்தாலும் கொஞ்சம் வாய்  அடித்தால்  இவர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கோவக்கார பெண்ணாகவே பார்க்கப்பட்டார் இதனால் மக்கள் அவரை திட்டி தீர்த்து வந்தனர் இதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வெளிவந்து  குழந்தைகளுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் மேலும் தற்போது அவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தியும் வருகிறார்.

இவருக்கு பீட்டர் பால் என்பவர் உதவி செய்து வருகிறார் மேலும் இவர்களுக்கு இடையே பல வருடங்களாக நல்ல நட்பு வந்த நிலையில் தற்போது அது காதலாக மாறி உள்ளது இதனை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். வனிதாவின் முடிவிற்கு அவரது மகள்கள்  ஓகே சொல்லி உள்ளதால் தற்போது அவர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். அவர் தற்போது தனது வருங்கால கணவருடன் சேர்ந்து செல்ஃபி ஒன்று எடுத்துக்கொண்டார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

vanitha-peter-paul
vanitha-peter-paul

Leave a Comment