தமிழ் சினிமாவில் கலக்கிய சினிமா பிரபலங்களை தொடர்ந்து அவரது வாரிசுகள் தமிழ் சினிமாவில் தற்பொழுது நடித்து வருகின்றனர் அந்த வகையில் விஜய், ஜீவா, அதர்வா, சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி போன்றோர் பிரபலங்கள் பிரபலங்களின் வாரிசுகளாக இவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் தனுஷூம் கூட இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு புதிய பாதையை அமைத்துக்கொண்டு அதில் தற்போது பயணித்து வருகிறார் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர், பாடகர் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் விளங்குகிறார் தனுஷ்.
தனுஷ் குடும்பத்தில் தனுஷ் மற்றும் அவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இவர்களைத் தவிர இரண்டு சகோதரிகள் உள்ளனர் ஒருவர்தான் பெரும் மருத்துவராக இருப்பவர் கார்த்திகா இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கார்த்திகா சமிபத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் இந்த நிலையில் சமீபத்திய பேட்டி பதில் அளித்தார் அதில் கூறியது எங்கள் செல்வராகவன் அண்ணன் மிகப்பெரிய டியூஷன் சென்டர் எங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தது அண்ணா தான் ரொம்பவும் வித்தியாசமானவர்.

தம்பி தனுஷ் முதலிலிருந்து செஃப் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார் ஆனால் அவர் பிறவி நடிகர் என்பதை இப்பொழுதுதான் உணர்கிறோம் சிறுவயதிலிருந்து ஒரு விஷயம் வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை முழுமையாகச் செய்து முடிப்பார் தற்போது அவர் படங்களிலும் செய்து வருகிறார் அதனாலேயே அவரது வெற்றிக்குக் காரணமாக இருந்து வருகிறது மேலும் அவர் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை எனவும் கூறினார்.