அஜித்-ஷாலினிக்கு முன்பாக இவர்கள்தான் தமிழ் சினிமாவின் முதல் காதல் ஜோடி.! இது வரையும் நம்மளுக்கு தெரியாத உண்மை இதோ..

ajith shalini
ajith shalini

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்து இதன் மூலம் இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதால் திருமணம் செய்து கொண்டு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சேர்ந்து வாழும் பல ஜோடிகள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் இணைந்து நடிக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் இணைந்து தொடர்ந்து சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்த இருவரும் காதலித்து குடும்பத்தினர்கள் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.இதே போல் பல திரைப்படங்கள் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். மேலும் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் உருவாகியுள்ளது.

தற்பொழுது மிகவும் ஃபேமஸாக இருந்து வரும் இந்த ஜோடிகளுக்கு முன்பாக முதன் முதலில் தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர்,நடிகை யார் என்பது பற்றிய தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது.இதுவரையிலும் யாருக்கும் இவர்களைப் பற்றி தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது பி.யூ.சின்னப்பா மற்றும் சகுந்தலா தான்.

actor 01
actor 01

இவர் தமிழ் சினிமாவில் நடிகர்களாக மட்டுமல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் வந்துள்ளார்.பி.யூ. சின்னப்பா இவர் நடித்த பிரித்திவிராஜன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சகுந்தலா நடித்திருந்தார். இருவரும் இணைந்து நடிக்கும் பொழுது இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

actress 213
actress 213

இந்த தம்பதியினர்களுக்கு ராஜ் பகதூர் எனும் ஒரு மகனும் உள்ளார் இவர்கள் இருவரும் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக அப்பொழுது இந்த அளவிற்கு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள் என ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.