ஒன்பது வருடத்திற்கு முன்பே அஜித் படப்பிடிப்பில் கொரோனா மாஸ்க் அணிந்த பிரபலம்.! வைரலாகி வரும் புகைப்படம்

0

ajith mankatha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது, இதற்கு முன் வெளியாகிய விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய படம் மங்காத்தா இந்த திரைப்படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகிய நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்த அஸ்வின் துரோபேக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அஜித்திற்கு வெங்கட்பிரபு ஒரு காட்சியை விலகிக் கொண்டிருக்கிறார் அவரின் பக்கத்தில் அஸ்வின் கொரனோ மாஸ்க் அணிந்து கொண்டு நிற்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கொரோனாவை ஒன்பது வருடங்களுக்கு முன்பே கணித்து உள்ள அஜித் என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அதுமட்டுமில்லாமல் அன்றே கணித்தார் அஸ்வின் ப்ரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.