பீஸ்ட், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், மற்றும் திருச்சிற்றம்பலம், திரைப்படங்களின் ரிலீஸ் தேதி இதோ.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக  வலம் வந்து கொண்டு இருப்பவர்கள் நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், ரஜினிகாந்த் இந்த நான்கு நடிகர்களும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குகின்றனர்.

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் மற்றும் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம், சூர்யா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த ஆகிய நான்கு திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாக காத்திருக்கிறது.

இந்த நான்கு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த நான்கு திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நான்கு படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த நான்கு திரைப்படங்களும் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

tamil-movies
tamil-movies

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாகும் என தெரிகிறது. தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளன.

அதையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறியுள்ளனர்.

Leave a Comment