காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் பிரபாஸின் “ராதே ஷ்யாம்” படத்திலிருந்து வெளியாகிய அழகிய வீடியோ.!

0

தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன் மற்றும் காதல் ஓரியன்ட் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து  ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார் நடிகர் பிரபாஸ்.

2002 இல் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த இவர் தற்போது வரையிலும் நடித்துக் கொண்டு வருகிறார் இவர் ஆரம்பத்தில் சிறப்பான திரைப்படங்களை கொடுத்தாலும் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருந்து வந்தார்.

இருப்பினும் 2015 இவருக்கு மிக சிறப்பான ஆண்டாக அமைந்தது மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமடைந்தார்.

அதற்கு காரணம் ராஜமௌலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு பாகுபலி என்ற திரைப்படம் வெளியாகி வேற லெவல் ஹிட் அடித்தது.

இந்த படத்தின் முலம் தெலுங்கையும் தாண்டி இந்தியா முழுவதும் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது.

இதை எடுத்து இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் இரண்டு மடங்கு அதிகரித்து கொண்டு நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இது ஒரு காதல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது. அதை வெளிக்காட்டும் விதமாக படக்குழு படத்தின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோ.

ராதே