103 வயதில் கொரோனாவை வென்று.! தனக்கு பிடித்த பீரை குடித்து கொண்டிய மூதாட்டி.

jenni
jenni

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிக எளிதாக கையாண்டு மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்நோயின் தாக்கத்தால் இதுவரையிலும் பல லட்சம் பேர் இறந்துள்ளனர் அதுபோல தற்போது வரையிலும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவர்கள் முழு விச்சுடன் செயல்பட்டு மக்களை காப்பாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் அமெரிக்காவைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஜென்னி ஸ்டெஜ்னா. என்பவர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கொரோனா வைரஸின் தாக்கம் மூதாட்டியால் தாக்குப்பிடிக்க முடியாது என மருத்துவர்கள் கூறினர் என் என்றால் 100 வயதுக்கு தாக்கு பிடிக்க முடியாது மருத்துவர்கள் ஆரம்பத்திலேயே கூறினார்.இருப்பினும் அந்த பாட்டி நம்பிக்கையை விடமால் கொரோனா வைரஸிடம் போராடி வந்த அவருக்கு அடுத்த சில தினங்களில் மருத்துவர்கள் சொன்னது போல கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் ஆனாதால் அவருக்கும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுட்டது.இதை அறிந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதனையடுத்து அந்த மூதாட்டி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின் உடல்நிலை தேறியதால் அவர் கொரோனா வைரஸிலிருந்து வெகு சீக்கிரமாக மீண்டார். இவரை பார்த்த மருத்துவர்கள் நீங்கள் மனவலிமையுடன் போராடியதனால் மட்டுமே உடல்நிலை தேறியாக கூறினார்.மேலும் தற்பொழுது அவர் வீட்டுக்கு அழைத்துச்செல்லாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவர் தனது பேத்தி பேரன் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

jenni
jenni

மேலும் அவர் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்ததை கொண்டாடும் விதமாக அந்தப் பாட்டி தனக்கு பிடித்த பீரை குடித்து கொண்டாடுகிறார் இச்சம்பவம் காண்பவரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.