முக்கிய ஏரியாவில் மாஸ் காட்டும் கேஜிஎப் – பிரச்சனையை சந்திக்கும் பீஸ்ட்.?

சினிமா உலகில் டாப் ஹீரோ படங்கள் மோதிக்கொள்ளும் போது ஏதோ ஒரு படம் குறை வசூலை அள்ளும். இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி இப்பொழுது விஜயின் பீஸ்ட்,  கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 ஆகிய படங்கள்  அடுத்தடுத்த நாட்களில் மோதுகின்றனர்.

இதனால் படங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது ஏன் என்றால் இரண்டு நடிகர்களும்  அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறது எப்படி தமிழில் விஜய்யோ அதேபோல கன்னடாவில் யாஷ் இவர்கள் இருவரும் மற்ற மொழிகளிலும் ஓரளவு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கின்றனர்.

தற்பொழுது இவர்களது பிஸினஸ் தற்போது மற்ற மொழிகளில் மோதிக் கொள்கின்றனர் அந்த வகையில் நடிகரின் கேஜிஎப் திரைப்படம் கேரளாவில் சுமார் 350 திரையரங்குகளில் வெளியிட படக்குழு முயற்சித்து வருகிறது அதன்பின் அறிவிப்பை வெளியிட்ட விஜயின் பீஸ்ட் திரைப்படம்.

தற்போது அங்கு 10 கோடிக்கு வியாபாரம் செய்ய பேசியது ஆனால் கேரளாவிலோ 5.5 கோடி தாருங்கள் என கேட்டு ஆச்சரியப்படுத்தியது. ஆனால் ஒரு வழியாக பீஸ்ட் தயாரிப்பு நிறுவனம் 8 கோடிக்கு பேசி முடித்து உள்ளதாம். ஆனால் இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் மோதிக்கொள்ள இருக்கின்றனர்.

மிகப்பெரிய வசூலை எடுக்குமா என்பதே பலரும் கேள்வி குறியாக இருக்கின்றனர் இரண்டு திரைப்படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ளது இரண்டு டாப் ஹீரோக்கள் மிகப்பெரிய அளவில் மோதிக் கொள்வதால் ஏதேனும் ஒரு திரைப்படம் தோல்வியை தழுவி தான் ஆகவேண்டும். எது எப்படியோ இரண்டு சூப்பர் ஸ்டார் திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.

Leave a Comment