வசூலில் வலிமை படத்திடம் தோற்றுப்போன பீஸ்ட்.. 4 நாட்களில் அள்ளிய கலெக்சன் எவ்வளவு தெரியுமா.?

விஜய் நடிப்பில் அண்மை காலமாக வெளிவந்த திரை படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் வருகின்ற படமும் அது போன்று இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல விஜயின் 65 வது திரைப்படமான பீஸ்ட் படம் அந்த திருப்தியை கொடுக்க வில்லை.

ஏனென்றால் படத்தில் லாஜிக் மீறல் மற்றும் சரியான காமெடி இல்லாததால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றுவருகிறது இருப்பினும் ஓரளவு நன்றாகவே வசூல் அள்ளி வருகிறது  காரணம் விஜய்க்கு தமிழ்நாட்டையும் தாண்டி பிற இடங்களிலும் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் இந்த திரைப்படம் படத்தின் பட்ஜெட்டை தாண்டி ஓரளவு அள்ளிவிடும் என கருதப்படுகிறது.

அதேசமயம் இந்த படத்தில் விஜய்யின் நடிப்பு மற்றும் காமெடி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று தகவல்கள் வெளிவருகின்றன இதனால் நிச்சயம் இந்த படமும் ஓரளவு டீசன்ட்டான வெற்றியை இருக்கும் என்பது சினிமா பிரபலங்களின் கருத்தாகவும் இருந்து வருகிறது. முதல் நாளில் 33 கோடிக்கு மேல் வசூல் செய்த பீஸ்ட் திரைப்படம் அடுத்த நாளில் பாதிக்கு பாதி வசூல் செய்தது.

இப்படியே நாட்கள் போக போக பீஸ்ட் படத்திற்கான வசூல் குறைந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் இந்தப் படம் இதுவரை வெளியாகி நான்கு நாட்கள் ஆகிய நிலையில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் பீஸ்ட் திரைப்படம் 4 நாட்களுக்குள் தமிழகத்தில் மட்டும்  சுமார் 75 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த படத்திற்கு முன்பே வெளிவந்த அஜித்தின் வலிமை திரைப்படம் நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் வலிமை படத்தின் வசூலை கூட முந்த் முடியாமல் தடுமாறுகிறது விஜயன் பீஸ்ட்.

Leave a Comment