ரசிகர்களே ரெடியாக இருங்கள்.! பீஸ்ட் படத்தின் ட்ரைலர் இப்படித்தான் இருக்க போகுது – அனிருத் போட்ட சூப்பர் பதிவு.

தளபதி விஜய் முதல் முறையாக இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் உடன் கைகோர்த்து  பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். இந்தப் படத்தையும் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் தீம் மியூசிக் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருக்கும் என தெரியவந்துள்ளது. ஒருவழியாக பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இவருக்கு முன்பாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தி  படத்தில் இருந்து இதுவரை பல்வேறு அப்டேட்கள் இப்பொழுது உள்ளது படக்குழு .

அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதனைத் தொடர்ந்து அரபி குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல் மற்றும் ஓரிரு போஸ்டர்கள் வெளியாகிய நிலையில் அடுத்ததாக  பீஸ்ட் படத்தின் டிரைலரை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலர் குறித்து இசையமைப்பாளர் அனிருத் சில தகவல்களை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூற வருவது : நாளை எல்லோரும் explosion க்கு தயாராக இருங்கள் என பதிவிட்டுள்ளார் அந்த பதிவை பார்க்கும் போதே தெரிகிறது நிச்சயமாக பீஸ்ட்  படத்தின் ட்ரெய்லர் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment