பீஸ்ட் திரைப்படம் ஹிட்டா.? பிளாப்பா.? பேட்டியில் உண்மையை சொன்ன பிரபல நடிகர்.! ஷாக்கான ரசிகர்கள்.

நடிகர் விஜய் ஒரு படத்தின் கதையை முழுவதும் கேட்டு அதில் சில சீன்கள் சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே சூப்பர் ஹிட் அடிக்கும். அதேசமயம் கோடி கணக்கில் வசூல் ரீதியாகவும் பிரமாண்ட வெற்றியை பெறுகின்றனர்.

இதனால் அவர் ஒவ்வொரு படமும் வெற்றியடையும் போது சம்பளத்தை உயர்த்திக் கொள்வார் அதேபோல தற்போது 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் இணைந்துள்ளார் இவர் இப்போது தனது 66 வது திரைப்படத்தின் ஷூட்டிங்கில் மும்பரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு நல்ல வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் ரேஞ்சுக்கு இந்த படம் வசூல் பண்ண வில்லை என்பது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் உண்மையாகவே விஜய்யின் பெஸ்ட் படம் வெற்றியா.. தோல்வியா.. என்பது இதுவரை சரியாக கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அன்மையில் பேட்டி ஒன்றில் பீஸ்ட் படம் வெற்றி தோல்வி என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் சொன்னது நிச்சயம் பெஸ்ட்  திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படம் தான் என கூறினார். விஜயின் பீஸ்ட் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் தான் தமிழகத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் அவர்களே உறுதிப்படுத்தி உள்ளது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

Leave a Comment