அண்மைகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் சோலோவாக வெளிவந்து நல்ல வெற்றியை பெறுவதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் அடித்து நொறுக்கி கின்றன அந்த வகையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் சிறு இடைவெளி விட்டு தான் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது.
அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கிக் காத்திருந்த திரைப்படம் தான் விஜய்யின் பீஸ்ட். இந்தப் படமும் ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக வெளியாகியது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்த நாளே வெளியாகிய படம் தான் கேஜிஎப் 2. இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கெனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாகம் எதிர்பார்ப்பதைவிட படம் செம்ம சூப்பராக இருந்ததால் தற்போது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
மேலும் இந்த படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஒவ்வொருவரும் மிரட்டும் வகையில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் தொடங்கிய நாளிலிருந்தே வசூல் வேட்டையை நடத்தி அசத்தி வருகிறது. கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்தனர் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி பார்க்கையில் பீஸ்ட் திரைப்படம் 178 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கேஜிஎப் திரைப்படம் இதுவரை 552 கோடி வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. கே ஜி எஃப் 2 வெளியாகிய நான்கு நாட்களிலேயே இவ்வளவு வசூல் செய்துள்ளது பீஸ்ட் படம் வெளியாகி ஐந்து நாட்களிலேயே இவ்வளவு வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது