கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உலக அளவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் எடுத்திருந்தார்.
பீஸ்ட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனதையே பெற்று வருகின்றன. மேலும் நெல்சனின் வழக்கமான ஸ்டைலில் இந்த படம் இல்லை எனவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே இந்த படத்தில் இருந்த இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டானது ஆனால் படத்தின் கதை சுவாரஸ்யம் குறைவாகவே உள்ளது.
ஏனெனில் ஒரே இடத்தில் படம் நகர்வது போலவும் காமெடிகள் பெரிதும் இடம்பெறவில்லை போன்ற பல குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். பீஸ்ட் படம் முதல் ஓரிரு நாட்களில் விஜய் ரசிகர்கள் படத்தை காண திரையரங்கிற்கு வருவதால் ஆரம்பத்தில் வசூல் வேட்டை நடத்தினாலும் நாட்கள் செல்லச் செல்ல பீஸ்ட் படத்தின் வசூல் குறைய வாய்ப்புள்ளது.
இதே நேரத்தில் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான நிலையில் அந்தப் படத்தை பார்க்கவே ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் சிலர் பீஸ்ட்க்கு பதிலாக கேஜிஎப் படத்தை திரையிட செய்கின்றனர்.
மேலும் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தூக்கினால் அடுத்து ரெட் ஜெயன் தயாரிப்பில் வெளியாகும். எந்த படமும் நீங்கள் கேட்பதற்கு தரப்படாது என மிரட்டல் விடுப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.