தமிழ்நாட்டில் அதிக திரையரங்கை கைப்பற்றிய பீஸ்ட்.? KGF 2க்கு கிடைத்த திரையரங்குகள் எத்தனை தெரியுமா..

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் உடன் கை கோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் படம் வெளிவருவதற்கு முன்பாக பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது மறுபக்கம் இயக்குனர் செல்வராகவன் பல பேட்டிகளில் விஜய் மற்றும் படம் குறித்து பேசி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறார்.

தற்போது படம் வெளிவர இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பல்வேறு இடங்களில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பீஸ்ட் ட்ரைலர் இதுவரை 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது சொல்லப்போனால் தமிழகத்தில் மட்டுமே பல திரையரங்குகளை கைப்பற்றி உள்ளது.

அதை அதிகாரப்பூர்வமாக திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 800 அல்லது 850 திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவித்தது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் கன்னட நடிகர் யாஷின் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது .

அந்த படத்திற்கு சுமார் 200 லிருந்து 150 திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது இந்த இரண்டு திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றுதான் ஜெயிக்கப் போகிறது இந்த இரண்டில் எந்த படம் சூப்பராக இருக்கிறதோ. அந்த படம் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிக திரையரங்குகளை கைப்பற்றி வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment