வெளியாகிய 15 நிமிடத்திலேயே சாதனை படைத்த பீஸ்ட் ட்ரைலர்.! KGF 2 ட்ரைலரின் சாதனையை முறியடிக்குமா

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ட்ரெய்லரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது இந்த நிலையில்  மாலை 6 மணிக்கு பீஸ்ட் டிரைலர் வெளியானது.

இந்த ட்ரெய்லரில் விஜய் பக்க ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என தெரிகிறது . படத்தில் ஒரு மாலில் தீவிரவாதிகள் நுழைந்து விடுகிறார்கள் மாலை ஆக்கிரமிப்பு  செய்கிறார்கள் மக்களை பிடித்து வைத்து கொல்கிறார்கள்  ஆனால் எதிர்பாராதவிதமாக விஜய் அந்த மாலில் மாட்டிகொல்கிறார். அதன் பிறகு எப்படி மக்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் விஜய் என்பது கதை.

தீவிரவாதிகளை எப்படி ஒழித்து கட்டுகிறார் அவர்களின் பின்னணி என்ன என்பதுதான்  படத்தின் கதை. இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த டிரைலர் வெளியாகி 15 நிமிடத்தில் 1.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 2.5 லட்சம் லைக்குகளை அள்ளியது.

இந்த வேகத்தில் போனால் கேஜிஎப் டிரைலரின் சாதனையை சுக்குநூறாக பீஸ்ட் ட்ரைலர் நொறுக்கிவிடும் என தெரிகிறது. வெறும் 15 நிமிடத்திலேயே இவ்வளவு மிகப்பெரிய சாதனை அசால்டாக செய்துள்ள டிரைலர் 24 மணிநேரத்தில் மிகப்பெரிய சாதனையை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் யோகி பாபு, பூஜா ஹெக்டே, செல்வராகவன் அபர்ணா தாஸ் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பீஸ்ட் படத்தில் செல்வராகவன் தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே பஞ்சாயத்து பேசுவது போல் நடித்துள்ளார்.

Leave a Comment