இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள விவரத்தை வெளியிட்ட BCCI.! கோலி, ரோஹித் எந்த கிரேடு தெரியுமா.?

இந்திய கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை நாம் அவ்வளவு தெரிந்து இருக்க மாட்டோம். அவை இப்போது புள்ளி விவரமாக BCCI திறமையான வீரர்களை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு A+, A, B,C என கிரேடு களை அமைத்து சம்பளத்தை வாரி வழங்குகிறார்கள்.

A+ வைத்திருக்கும் வீரர்களுக்கு 7 கோடி காண்ட்ராக்ட் பேசப்பட்டுள்ளது. A வைத்திருக்கும் வீரர்களுக்கு 5 கோடியே காண்ட்ராக்ட் பேசப்பட்டுள்ளது அதுபோல B வைத்து இருப்பவர்களுக்கு 3 கோடி பேசப்பட்டுள்ளது.

மேலும் கடைசியாக C வைத்திருப்பவர்களுக்கு ஒரு கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது ஆனால் தற்போது இந்தப் பட்டியலில் ஒரு சிலர் மாறியும் உள்ளனர்.அந்த வகையில் C கிரெட்டுக்கு புதிதாக சுமன் கில், சிராஜ்,  அக்ஷர் பட்டேல் ஆகிய மூவரும் இந்த இடத்தில் பிடித்துள்ளனர்.

மேலும் C கிரெட்டில் இருந்து மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் வெளியேறி உள்ளனர். மற்ற ஒரு சில வீரர்கள் கிரேடு முன்னேற்றமும், சரிவையும் சந்தித்துள்ளனர். 2020 – 2021 அதிக சம்பளம் வாங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் லிஸ்ட் இதோ.

A+ ல் ரோஹித் சர்மா, விராட், பும்ரா ஆகியோர் இருகின்றனர். A  வில் கேஎல் ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, முகமத் சாமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.

B ல் மயங்க் அகர்வால், புவனேஷ்வர் குமார், தாகூர், விருத்திமான் சாஹா உமேஷ் யாதவ்இடம் பிடித்து உள்ளனர்.  C கிரேட்டில்  சிராஜ், வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர், அக்ஷர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமான் விகாரி, சாஹல், குல்தீப் யாதவ் சைனி ஆகியோர் இந்த இடத்தை பிடித்துள்ளனர்.

 

Leave a Comment

Exit mobile version