IPL -ல் மீண்டும் தொடங்க திட்டம் போடும் பிசிசிஐ.? இரண்டு இடத்தை குறிவைக்கும் நிர்வாகம்.

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் 14 வது சீசனில் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் திடீரென இதில் விளையாண்டா ஒரு சில அணி வீரர்களுக்கு  கொரோனா தொற்று பாசிட்டிவாக இருந்ததால் முதலில் ஒரு மேட்ச் மட்டும் தடை செய்தனர். அதன் பிறகு ஒரு சிலருக்கு மீண்டும் வந்ததால் தற்காலிகமாக இதில் போட்டியை நிறுத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.

இரண்டு தினங்களாக வீரர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தியது அதிலும் குறிப்பாக வரும் சக்கரவர்த்தி, சஹா, மிஸ்ரா, சந்திப் வாரியர் ஆகியோர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது மேலும் இரண்டு ஊழியர்களுக்கும் பரவியதால் நிறுத்தியது  நல்ல முடிவு எடுத்துள்ளது ஏனென்றால் இவர்களையும் தாண்டி வெளிநாட்டு வீரர்களும் இதில் பங்கு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கினால் T20 கோப்பை இந்தியாவில் நடத்தப்பட உள்ளது இது அக்டோபர், நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்து விடும் அதன் பிறகு ஐபிஎல் போட்டியை நடத்த ஒரு வழியை தேர்ந்தெடுத்து உள்ளது.

இந்தியாவில் இந்த போட்டி நடத்த விட்டாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது இது ஒருபக்கம் ஐபிஎல் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நற்செய்தி தான். இந்த நிலையில் T20 உலகக் கோப்பையை இந்தியாவில் தான் நடக்க இருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை அதிகமாக வீசுவதால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது அதனால் அந்த போட்டி நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒரு சில கிரிகெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இது நடக்கவில்லை என்றால் எப்படி ஐபிஎல் போட்டியும் எப்படி  நடத்துவார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது எல்லாத்தையும் ஒரே முடிவு  கொரோனா இரண்டாம் வகை கட்டுப்பாட்டுக்குள் வந்தால் மட்டுமே ஐபிஎல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகிறது.

இப்போது வெளிநாட்டு அணிகள் SCHEDULE  எதுவும் இல்லாமல் இருந்தால் தான் IPL லில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment