பிரபு, கார்த்திக் மார்க்கெட் இழந்த பொழுது மறுவாழ்வு கொடுத்தவரே இவர்தான்.! உண்மையை உடைத்த பிரபலம்

karthik
karthik

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் முத்த காட்சியில் நடிக்காததற்கு காரணம் குறித்து பிரபல பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ரகசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீப காலங்களாக தொடர்ந்து நடிகர் நடிகைகள் குறித்து ஏராளமான தகவல்களை பகிர்ந்து வரும் வருவதை பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக வைத்திருக்கிறார்.

எனவே இவர் கூறும் சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் இவரின் மீது கடுப்பில் இருந்து வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறகு யூடியூப் சேனலின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து திரைப்பட நட்சத்திரங்கள் குறித்த தகவலை பகிர்ந்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ரகசிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறுகையில், ரஜினிகாந்த் 170 படம் நடித்து இருக்கிறார். ஆனால் ஒரு படத்தில் கூட அவர் முத்தக் காட்சியில் நடிக்கவில்லை.. அதற்கு என்ன காரணம் என்றால் மக்கள் மத்தியில் தான் நல்ல நடிகர் என்ற பெயர் எடுக்க வேண்டும் என்றால் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க கூடாது என்று அவருக்கு தெரியும்.

முதன் முதலில் தன்னை வைத்து படம் தயாரித்த 14 தயாரிப்பாளர்களுக்கு படம் செய்து கொடுத்து முழு லாபத்தையும் தந்து இருக்கிறார். அந்த மனித பண்பு மிக்கவர், நானும் அவருடன் மூன்று திரைப்படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன் தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைப்பார்.

பிரபு, கார்த்தி மார்க்கெட்டில் இழந்த பொழுது அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தார். எந்த விதமான கிசுகிசுப்பு வந்தாலும் அதையெல்லாம் தாண்டி மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருக்கிறார் என்று ரஜினிகாந்த் முத்த காட்சியில் நடிக்காதது குறித்தும், சக நடிகர்களுக்கு உதவியது குறித்தும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.