1995ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பாட்ஷா, இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நக்மா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தார்கள் மேலும் பாஷா திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
பாட்ஷா திரைப்படத்தை இன்றுகூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள், ரசிகர்கள் பாஷா திரைப்படத்தின் கன்னட ரீமேக்கை சிலகாலமாக கலாய்த்து வருகிறார்கள், இந்த திரைப்படம் மட்டுமில்லாமல் இன்னும் சில திரைப்படங்களின் கன்னட ரீமேக் திரைப்படங்களை கலாய்த்து வருகிறார்கள்.
இப்படி இருக்க பாஷா திரைப்படம் பங்களாதேஷ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் சில காட்சியை ரஜினி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார்கள், இதை மிகவும் கிண்டல் அடிக்கிறார்கள் ரசிகர்கள்.
பங்களாதேஷ் பாட்ஷா… இது எப்படி இருக்கு??? pic.twitter.com/ogs1yFwyME
— மாணவன் (@maanavanseedan) May 6, 2020