பாட்ஷா-2 திரைப் படத்தை இயக்கப்போவது அட்லியா.! சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

0

தமிழ்சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த், இவர் தற்பொழுது தர்பார் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்த திரைப்படம் பாட்ஷா இந்த திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையும் படைத்தது.

இப்பொழுது பல ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியானாலும் அதற்கு முன்னுதாரணமான திரைப்படம் என்றால் அது பாட்ஷா தான், பாட்ஷா திரைப்படத்தில் ரஜினி தாறுமாறான கெட்டப்பில் நடித்து இருந்தார், வில்லனாக ரகுவரன் மிரட்டி இருந்தார், இன்றும் தொலைக்காட்சியில் பாஷா திரைப்படம் போட்டால் குடும்பத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி பேட்டியில் கலந்து கொண்ட அட்லி பாட்ஷா 2 கதை தயார் செய்துவிட்டதாக வெளிப்படையாகக் கூறினார், அட்லி இயக்கத்தில் தற்போது பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய ரகுவரனை யாராலும் மறக்க முடியாது, பாட்ஷா திரைப்படத்தில் ரஜினி எப்படியோ அதே போல் ரகுவரன் கதா பாத்திரம் மிக முக்கிய கதாபாத்திரம், அதை ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் ரகுவரன் இல்லாமல் பாட்ஷா-2 கிடையாது என திட்டவட்டமாகக் கூறினார்.